சாதி வெறி 30%தமிழ் நாடு பள்ளிகளில் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில்.. 30% பள்ளிகளில் ஜாதி பாகுபாடு உள்ளது.. குடிக்க கூட தனி குவளை! அதிர வைக்கும் ஆய்வு.
(இந்தியாவிலேயே Tamizhagathil தான் அதிகமான SC.St. கட்சிகள் மற்றும் சங்கங்கள் உள்ளன.no use.எல்லோரும் ஜால்ரா பொட மட்டும் தான், பயன்படுத்தப்படுகிறது)
சென்னை:
மாணவர்களுக்கு இடையே தண்ணீர் குடிக்க தனித்தனி டம்ளர்கள் வைத்திருப்பது என பல்வேறு சாதிய வேறுபாடுகள் தமிழ்நாடு முழுவதும் 30 சதவிகித பள்ளிகளில் காட்டப்படுவதாக அதிர வைக்கும் ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
உள்ளங்கையில் உலகத்தை பார்க்கும் 21 ஆம் நூற்றாண்டிற்கு வந்துவிட்டோம்..ஆனாலும் சாதி என்னும் தீ இன்னமும் இங்கே இருப்பது அவலத்தின் உச்சம் தான். அதிலும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையை போதிக்கும் பள்ளிகளிலும் சாதி பாகுபடு நீடிப்பதுதான் வேதனையிலும் வேதனை... தமிழ்நாட்டில் அதிக அளவில் சாதியவேற்றுமைகள் இப்போதும் நீடிப்பதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
நாங்குநேரியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாதிய நோக்கத்துடன் நடைபெற்ற சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது.
தீண்டாமை உள்ளது: இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபடு குறித்து சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 36 மாவட்டங்களில் உள்ள 441 பள்ளிகளில் சுமார் 641 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளபப்ட்டுள்ளது. 3 மாதங்கள் நடத்திய ஆய்வில், 90 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 10 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி, 441 பள்ளிகளில், 39 விதமாக தீண்டாமை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
1) ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது,
2)தலித் மாணவரை தொடாமல் இருப்பது,
3) தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் கொடுப்பது,
4)மதிய உணவின் போது குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு தனி வரிசை,
5) தலித் மாணவர்களை டாய்லட்களை சுத்தம் செய்ய வைப்பது,
6) தண்ணீர் குடிக்க தனித்தனி டம்ளர்கள் என்பன உள்ளிட்ட பல தீண்டாமை கொடுமைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஊரக பள்ளிகளில் தான் அதிகம்: ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 25 பள்ளிகளில் சாதியவன்முத்துடன் மோதல்கள் நடைபெற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சாதிய பாகுபடு நகர்புற பள்ளிகளை விட ஊரக பள்ளிகளில் தான் அதிகம் இருப்பதும் ஆய்வு மூலம் தெரியவந்து இருப்பதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிலேயே சமூக நீதிக்கான முன்னோடியாக திகழும் தமிழகத்திலேயே இது போன்ற நிலை இருப்பது பெரும் கவலை தருவதாக கூறினார். இது தொடர்பாக சாமுவேல் ராஜ் கூறுகையில், "சமூகநீதிக்கென்று அதிகம் பங்களிப்புகளை செய்த மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு மத்தியிலேயே சாதியப்பாகுபாடு உள்ளது" என்றார்.
சமத்துவக்குழுக்கள்:
சாதிய வேறுபாடுகளை களையும் பணி பள்ளிகளில் இருந்து தொடங்குவதுதான் சரியான ஒன்றாக இருக்கும் எனவும் சமூக நீதியை உறுதி செய்ய மாநில அளவில் அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆய்வு நடத்தியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
சாதிய வேறுபாடுகளை களையும் பணியை பள்ளிகளில் இருந்து தொடங்குவதுதான் சரியானது என குறிப்பிடும் இந்த அமைப்பு, சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கென மாநில அளவில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகள் தோறும் சமத்துவக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி தலைமையில் குழு: கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு இடையே நிலவும் சாதிய வேறுபாட்டை களைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க தமிழக அரசால் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிடம் தனது ஆய்வறிக்கையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சமர்பித்துள்ளது.
...........................................
...........................................
நமது பரிந்துரைகள்...
1)அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி களில் கட்டாயமாக CCTV பொருத்தப்பட்டு,அதை மாவட்ட கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும்.
இதனால்,
A) சாதிப் பாகுபாடுகள் குறையும்.
B)பெண்களை ஏகடியம் செய்தல் நிறுத்தப்படும்.
Comments
Post a Comment