INDIA.alliance has released the 2024.Election Manifesto.Good News for all the citizens of India.
*காங்கிரஸ் தேர்தல் அறிக்கை*
விவசாயிகள்,
பெண்கள், இளைஞர்களுகளை
கவரும் வகையில்
முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றிருக்கிறது
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
நாடாளுமன்றத்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
இந்த நிலையில்,
ஒவ்வொரு கட்சியும்
தங்கள் தேர்தல் அறிக்கைகளை
வெளியிட்டு வருகின்றன.
இந்த தேர்தலில்
பா.ஜ.க- தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள்
*‛இந்தியா'*
என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றன.
இந்த கூட்டணியில் காங்கிரஸ்,
தி.மு.க உள்பட
மொத்தம் 25-க்கும் அதிகமான கட்சிகள்
அங்கம் வகிக்கின்றன.
கடந்த 2014, 2019 தேர்தல்களில் காங்கிரஸுக்கு
ஏற்பட்ட தோல்விகளிலிருந்து
மீண்டு,
ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்,
2024 மக்களவைத் தேர்தலுக்கான
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர்
*மல்லிகார்ஜுன கார்கே*
வெளியிட்டார்.
இந்த நிகழ்வில்
கட்சியின்
முன்னாள் தலைவர்கள்
சோனியா காந்தி,
ராகுல் காந்தி,
பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக இருந்த
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு
அறிக்கையை
விவரித்தார்.
*அதில் முக்கிய வாக்குறுதிகள் சில...*
1.
பா.ஜ.க ஆட்சியில்
நீதி மறுக்கப்பட்ட *அனைவருக்கும்*
*நீதி வழங்கப்படும்.*
2.
குடும்பத்தில்
*பெண் ஒருவருக்கு ஆண்டுக்கு 1 லட்சம்*
வழங்கப்படும்.
3.
சமூக,
பொருளாதார,
*சாதிவாரி கணக்கெடுப்பு*
நடத்தப்படும்.
4.
*Work, Wealth, Welfare*
அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்படும்.
5.
*NEET, CUET தேர்வு*
மாநிலங்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாக அறிவிக்கப்படும்.
மாநில அரசுகள் தங்களுக்கான தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தலாம்.
6.
*SC, ST மற்றும் OBCக்கான இடஒதுக்கீட்டில் 50% வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவோம்.*
7.
ஒவ்வொரு
குடிமகனைப் போலவே, *சிறுபான்மையினருக்கும்*
*உடை, உணவு, மொழி*
மற்றும் தனிப்பட்ட சட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும்.
8.
*தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தத்தை ஊக்குவிப்போம்.*
அத்தகைய சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட சமூகங்களின் பங்களிப்பு மற்றும் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும்.
9.
*கல்வி நிலையங்களில் பட்டியலின மக்கள் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் ரோகித் வெமுலா சட்டம் இயற்றப்படும்.*
10.
*ஒரே நாடு*
*ஒரே தேர்தல் முறை* *கொண்டுவரப்படாது.*
11.
*பெண்களுக்கு*
*ஒரே வேலை*
*ஒரே ஊதியம்* *அமல்படுத்தப்படும்.*
12.
*ஆசிரியர்கள்*
பிற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
13.
பா.ஜ.க
ஏற்படுத்திய
*சேதாரத்தை சீர் செல்வோம்.*
14.
திருமணம்,
வாரிசுரிமை,
தத்தெடுத்தல் ஆகியவற்றில்
ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் இருக்கும்
*ஏற்றத்தாழ்வு களையப்படும்.*
15.
*அரசுத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்.*
16.
*விவசாயிகளுக்கு*
குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் குறித்த
*எம்.எஸ் சுவாமிநாதனின்*
பரிந்துறை நிறைவேற்றப்படும்.
17.
*ஊடக சுதந்திரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.*
18.
*புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.*
19.
*மாற்றுத் திறனாளிகள்,*
*வயதானவர்களுக்கான பென்ஷன் ரூ.1000 மாக உயர்த்தப்படும்.*
20.
மருத்துவமனை,
நூலகங்கள்,
பள்ளிகள்
கட்டுமானப் பணிகளுக்கு
*100 நாள் பணியாளர்களுக்கு முன்னுரிமை*
வழங்கப்படும்.
21.
*விவசாயிகள்*
தங்கள் விளைப்பொருளை நேரடியாக
விற்பனை செய்ய
*சந்தைகள் அமைக்கப்படும்.*
22.
*100 நாள் வேலை* *திட்டத்துக்கான*
*ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.*
23.
ஒவ்வொரு மாவட்டத்திலும் *வேளாண்,*
*கால்நடைக் கல்லூரிகள் அமைக்கப்படும்.*
24.
*மீனவர்களுக்கான* *டீசலுக்கு*
*பழைய மானியம்* *தொடரும்.*
25.
2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் *பெண்களுக்கு 50 சதவிகித வேலை வாய்ப்பு*
வழங்கப்படும்.
26.
பணியில் இருக்கும்போது
*தூய்மை பணியாளர்கள்*
உயிரிழந்தால்
*இழப்பீடாக ரூ.30 லட்சம்*
வழங்கப்படும்.
27.
அரசியல் சாசன
*8 வது அட்டவணையில்* ஏராளமான மொழிகளை சேர்க்க
*நடவடிக்கை*
எடுக்கப்படும்.
28.
பா.ஜ.க-வின்
*மக்கள் விரோத சட்டங்கள்*
திரும்பப் பெறப்படும்.
29.
*அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.*
30.
மாணவர்களின்
*கல்விக் கடன் ரத்து* செய்யப்படும்.
31.
*பி.எம். கேர்ஸ் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்* .
32.
*தனிமனித சுதந்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.*
33.
*ஜி.எஸ்.டி சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும்.*
*தொகுப்பு*
*தமிழ். இளவேனில்*
*9884992008.*
Comments
Post a Comment