RESERVATION FOR EWS.A REVIEW.18.05.24.BY UT NEWS.CHENNAI.
*“என்னடா அம்பி! பையனை ஸ்கூல்ல சேர்த்துட்ட போல. மொத வேலையா கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிடு. இப்ப சென்ட்ரல் கவர்மண்ட் நடத்துற காலேஜ்ல நம்மவாளுக்கு EWS ரிசர்வேஷன் இருக்குன்னு தெரியுமோ நோக்கு?”*
*“வாங்கிட்டேன் மாமா! ஆனா மாமா… ஒரு சந்தேகம்...? நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் ரிசர்வேஷனையே ஒழிச்சு கட்டணும்னு சொல்லிண்டுருந்தேள். இப்ப ஏன் EWS ரிசர்வேஷனை யூஸ் பண்ண சொல்றேள்?”*
*“அபிஷ்டு! அந்த சமயத்துல நம்மவாளுக்கு ரிசர்வேஷன் இல்ல, அதனால அதை ஒழிச்சு கட்டணும்னு சொன்னேன்... இப்பதான் நமக்கும் வந்துடுத்தே... நமக்கு கிடைக்காததை மட்டும்தான் மோசம்னு சொல்லணும். ஹ்ம்ம்… ஒரு காலத்துல 100% ரிசர்வேஷன் அனுபவிச்சோம். இப்ப வெறும் பத்து பர்சன்ட்டுக்கு திண்டாடுறோம்”*
*“100% ரிசர்வேஷனா? அது எப்படி மாமா?”*
*“ரொம்ப சிம்பிள்டா! வர்ணாசிரமம்னு ஒரு சிஸ்டம். அந்த சிஸ்டப்படி இன்ன சாதியில் பொறந்தவா இன்ன தொழில்தான் பண்ணனும்னு பிக்ஸ் பண்ணிட்டோம்.* *இருக்குறதுலேயே ஈஸியான வேலையை எல்லாம் நம்மவா வெச்சிக்கிட்டோம். வயல்ல வேலை பார்க்குறது, தெருவை சுத்தம் பண்ணுறது, பொணம் எரிக்கிறது, கார் ஓட்டுறது, இந்த மாதிரி கஷ்டமான வேலையை எல்லாம் மத்தவாளுக்கு கொடுத்துட்டோம்.* *கருவறைக்குள்ள சாமி பக்கத்துல நின்னு அர்ச்சனை பண்ணுற நம்மவாளை மத்தவா எல்லாம் “சாமி”ன்னு பயபக்தியோட கூப்பிட ஆரம்பிச்சா. அதனால சமூகத்துல நாம்தான் ஒசத்தின்னு ஒரு நம்பிக்கை மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சிடுத்து.அதனால பெரிய பதவியெல்லாம் நமக்கு மட்டும்தான்னு ஆகிடுத்து”*
*“கருவறைக்குள்ள நின்னு மந்திரம் சொல்லுறதை எப்படி மாமா ஈஸியான வேலைன்னு சொல்றேள். எவ்ளோ மனப்பாடம் பண்ணனும்?”*
*“ஒருத்தர் செருப்பு தைக்கிற வேலை செஞ்சா, அவர் செருப்பை ஒழுங்கா தைச்சு கொடுத்தாத்தான் கூலி கிடைக்கும். செருப்பை நன்னா அப்படி இப்படி இழுத்து பார்த்து திருப்தியா இருந்தாத்தான் காசு கொடுப்போம். தெரு சுத்தமா இல்லாட்டி தெருவை சுத்தம் பண்ணுறவர்க்கு சம்பளம் கிடைக்குமோ? துணி சுத்தமா இல்லாட்டி துணியை வெளுத்தவர்க்கு பணம் கிடைக்குமோ? இப்படி எல்லா வேலையிலயும் output இருந்தாத்தான் காசு கிடைக்கும். ஆனா நம்மவா பார்க்குற வேலைக்கு மட்டும் output என்னான்னு யாருக்கும் தெரியாது. நாம மந்திரம் சரியா சவரைக்கும் தப்பா சொல்றோமான்னு மக்களுக்கு தெரியாது. நாம சொல்றதுதான் மந்திரம். நாம சொல்றதுதான் சடங்கு. லோகத்துல வேற எந்த வேலைக்காவது இந்த வசதி உண்டா?”*
*“இந்த சிஸ்டத்துக்கு மத்தவா எப்படி மாமா ஒத்துண்டா? மக்கள் என்ன அவ்வளவு முட்டாளா?”*
*“மக்கள்கிட்ட கடவுள் நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்கற வரைக்கும், அவாளை என்ன சொல்லி வேணா ஏமாத்தலாம்... இந்த வர்ணாசிரம சிஸ்டத்தை சொன்னதே பகவான்தான்னு ஒரே போடா போட்டுட்டோம்... அதுவும் சும்மா சொல்லல, அதுக்காக எக்கச்சக்கமா புராண கதைகளை உருவாக்குனோம்... அந்த புராண கதை வழியா இந்த வர்ணாசிரம சிஸ்டத்தை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனசுல பதிய வெச்சோம்”*
Excellent.
Comments
Post a Comment