தி.மு.க,அதிமுக தலித் வேட்பாளருக்கு பொது MP தொகுதி வழங்கி உள்ளதா?16.06.2025.சிவாஜி.
Utn Sivaji.9444917060.
தி.மு.க பட்டியல் வேட்பாளருக்கு பொது தொகுதி MP வழங்கி உள்ளதா?
....
இது ஒரு தன்மான கோரிக்கை அல்ல.*
தி மூ கா கட்சியில் பட்டியல் இன பிரிவு கூட இல்லை.பட்டியல் இனம் அவர்களை பொறுத்தவரை அடிமைகள்.அவர்கள் சொல்வதை கேட்கும் அடிமைகள்.கேட்காவிட்டால் அவர்களை தூக்கி எறிவார்கள்.
திமுக அதிமுக பாஜக பாமக நாம் தமிழர் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் என யாரிடமும், பொது தொகுதியை SC ஜாதிக்கட்சி வேட்பாளர் கூட்டணியில் இருந்து கொண்டு கேட்க உரிமையே இல்லை!
இந்தியாவில் 2024 பாராளுமன்ற தேர்தலில், 62 பொது தொகுதியில் பட்டியல் இன MP கள் வெற்றி பெற்று ள்ளனர்.ஆனால் தமிழகத்தில் இதுவரை ஒருவர் கூட இல்லை.இதுதான் திராவிட மாடல் அரசு.
ரிசர்வேசனை உருவாக்குவது,கடை பிடிப்பது அரசாங்கத்தின் வேலை.
அரசியல் கட்சிகளின் வேலை ரிசர்வேஷன் ஐ உடைப்பது, இல்லாமல் செய்வது,ஏனோ தானோ என ஒரு ஆணை போட்டு அதை கோர்ட் தடை செய்ய வைப்பது.
கூட்டணி எதுக்காக வைக்கனும்?
உங்கள் கட்சி தனியாக ஜெயிக்க முடியாது, ஒட்டே கிடையாதுன்னு தான் கூட்டணி வைக்கேறங்க.
அதான் ரிசர்வ் தொகுதியிருக்கே.
அதிலும் ஒட்டு பொது மக்கள் தானே போடனும்.75%
ஏன்னா SC யில இருக்கிற அத்தனை பேரும் SC கட்சியைவிட,வேட்பாளரை விட, நல்ல அம்பேத்கர் அறிவு செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள்.அவர்களே உங்களுக்கு ஓட்டு போடமாட்டார்கள்.
ஒட்டே மத்தவங்க75% போட்டாதான் வெற்றியே!
பொது தொகுதி தான் வேணும்னா போய் 62 பேர் போல சுயேச்சையா நில்லுங்க.
இல்லை தனியா நின்னுக்க! ஜெயிசசி காட்டுங்க.
கூட்டணியில இருந்துகிட்டு எப்படி கேட்கமுடியும்.?
SC கேட்டகிரி வேட்பாளர்கள் எங்கே வேணுன்னாலும் தேர்தல்ல நிக்கலாம். ரிசர்வ் தொகுதியில ரிசர்வ் கேட்டகிரியில் வரும் ஜாதிகள் மட்டுமே வேட்பாளராக முடியும். ஆனால் ஒட்டை அனைத்து ஜாதிக்களும் சேர்ந்து தான் போட்டாகனும்.
ரிசர்வ் தொகுதியில் இரட்டை ஓட்டுரிமை 1952 வரை இருந்தபோது,ஒன்று பொது MP தேர்ந்து எடுப்பது.மற்றொன்று பொது MP தேர்ந்தெடுப்பது.ஒரு எஸ் சி கே 2 ஓட்டு இருந்தது.இதை வேண்டாம் என எடுத்தவர்கள் காங்கிரஸ் கறைகள்.
இப்போது அனைவரும் ஒட்டப்போடுவதால் ரிசர்வ் தொகுதியில் இருக்கும் SC வேட்பாளர்கள் அனைவரும் இதர ஜாதிக்காரர்களின் செல்வாக்கைப் பெறவே அதிகம் பாடுபடுவர்.இதர ஜாதிக்கு அடிமையாய் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.(ஒரு சிலர் மட்டும் தொகுதிக்கு உழைத்து ஓட்டு வாங்குவார்கள்)
SC கட்சிகள் என்றைக்குமே போது மக்கள் செல்வாக்கை பெற்றதில்லை. பெற முயற்சித்ததும் இல்லை.
சோம்பேறிக்கு சோறு போடறது போலத்தான், கூட்டணி கட்சிகள் ரிசர்வ் சீட்டு ஒதுக்குவது.
அதனால எந்த தொகுதியில கூட்டணி கட்சி சீட்டு ஒதுக்கினால் என்ன? ஜெயித்து காட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு.
செல்வாக்குள்ள எந்த கூட்டணிக் கட்சிகிட்டேயும் பொது தொகுதி கேட்க கூடாது,முடியாது.
கூட்டணி கட்சிகிட்டேயே ரிசர்வேசனா? இந்த கேவலத்தை தான் செய்யும்.
எந்தக் கட்சியும் பொது தொகுதியை ஒதுக்கனும்னு அவசியமே இல்லை. ரிசர்வ் தொகுதி இருக்கும் பட்சத்தில்.
கருணாநிதி கூறியது முற்றிலும் 100 க்கு 100 சரியானது.
கூட்டணியில சீட்டை முடிவு பண்ணுவது செல்வாக்குள்ள கட்சி தான். வேணான்னா தனியா நீயே 39 தொகுதியிலும் நின்னுக்க! ரிசர்வ் தொகுதியில கூட்டணி கட்சியே நின்னுதுன்னா பொது தொகுதியில கூட்டணிக்கட்சியே ஒதுக்கும்.
எல்லாத் தொகுதியிலும் அனைத்து ஜாதியினரும் தான் ஒட்டுப் போட்டாகனும். வேட்பாளரை நிறுத்துவதற்கான ரிசர்வேசன் மட்டும் தான் ரிசர்வ் தொகுதி.
இதுவே தெரியாதவன் எல்லாம் அரசியலை பத்தி நிறைய எழுதறான் பொது தொகுதி வேணும்ன்னு. அதான் இந்த நாட்டின் கேவலம்.
Dr அம்பேத்கரை தோற்கடிக்க வேலை செய்தது தான் காங்கிரஸ்.ஆனால் இன்று மொத்த காங்கிரசும் அம்பேத்கர் ஷூவிற்கு அடியில்.அகில இந்திய தலைவர் எஸ் சி.தமிழ் மாநில தலைவர் எஸ் சி.எஸ் சி வைத்துதான் அங்கு டெய்லி பாலிடிக்ஸ்.
திமுக அதிமுக பாஜக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் யாராயிருந்தாலும் யாரை நிறுத்தப்போறாங்க ரிசர்வ் தொகுதியில?
SC யைத்தான். இதுல SC கட்சிகளுக்கு என்ன? இரண்டு கொம்பா முளைச்சிருக்கு? அதிமுக SC நிக்கறான் இல்லே, நீயும் நில்லு. SC நிக்கறான் இல்லே நீயும் நில்லு. நாம் தமிழர் கட்சி SC நிக்கறான் இல்லே நீயும் நில்லு. பாமக SC நிக்கறான் இல்லே நீயும் நில்லு. அவன் SC இல்லாம நீ மட்டுமா SC?
இந்த சின்ன விஷயம் கூட தெரியலை. ஆனால் அரசியலை எழுத வராங்க... என்னத்தை பண்ணித் தொலைக்கிறது?
SC க்கள் மட்டுமே வாக்காளர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு தொகுதியும் கிடையாது.இருந்தது 1952 எலெக்ஷன், மிஞ்சிப்போனா அதே ஒரு சதவீதம் இரண்டு சதவீதம் ஒட்டுத்தான் ரிசர்வ் தொகுதியாக இருந்தாலும் சரி பொது தொகுதியாக இருந்தாலும் சரி! இதான் ஒட்டு! இதை வைச்சுகிட்டு எந்த ஆட்சியை எந்த SC ஜாதிக்காரன் பிடிக்க முடியும். ஒன்னும் முடியாது. மொத்த SC ஜாதிக்காரர்களை சேர்த்தாவே அவ்வளவு தான் SC மக்கள் தொகை! அதுல எஸ் சி பாறை,பள்ளர்,அருந்துதின்னி பிரிஞ்ச ஜாதிக்காரங்க எண்ணிக்கை சொல்லவே வேணாம்.
பல பேர் தப்பா புறிஞ்சுக்கிறான். ரிசர்வ் தொகுதின்னா SC மக்கள் தொகை உள்ள தொகுதின்னு. கேண்டிடேட் மட்டும் தான் SC வாக்காளர்கள் எல்லாம் அதே மெஜாரிட்டி கேட்டகிரி மக்கள் தான்.
அப்படி எல்லாம் தேர்தல் ஆணையம் தொகுதிகளை எந்தக்காலத்திலும் ஜாதி குரூப்புக்காகப் பிரிக்காது. பிரிக்கவே கூடாது. ஜாதி குரூப்களை வளர்க்கிற வேலையா? எலக்சன் கமிசனோட வேலை?
ரிசர்வ் தொகுதிலேயும் பொதுக்கட்சி வேட்பாளனுக்குத்தான் மக்கள் வாக்களிப்பாங்க! ஜாதி குரூப் பாலிட்டிக்ஸ் பண்ணா கட்சியை விட்டு நீக்கிடுவாங்க. வேற கட்சிக்கு தாவினாலும் பதவி பறிபோய்டும் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி!
இதுல இவ்வளவு மேட்டர் இருக்குது. எதற்கு SC கட்சியை உதயசூரியன் சின்னத்துல நிக்க வைச்சாங்க. அதே மாதிரி அதிமுக வும் நிறைய தடவை நிக்க வைச்சிருக்கு. இதுங்களை நம்பி சீட்டைக் கொடுக்க கூடாதுங்கற கொள்கையில தான். இதை முதல்ல புறிஞ்சுக்கங்க. பாஜக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் யாராக இருந்தாலும் இதை தான் பாலோ பண்ணுவாங்க.
தேர்தலுக்கப்புறம் கூட்டணியை வாபஸ் வாங்கிட்டு வேற கட்சிக்கூட கூத்தடிக்க ஆரம்பிச்சுடுவான். அதை தடுக்கத்தான்!
பிடிக்காத கட்சியை எதிர்க்கிறேன்னு அரசியல் சாதுர்யங்களை எதிர்க்காதே! அரசியல் தந்திரங்களை எதிர்க்காதே!
இதை எல்லாம் எதிர்த்து பகுஜன் சமாதி கட்சி ஒரே கட்சி தான் அகில இந்திய முழுவதும் கிளைகளைத் திறந்து உத்தர பரதேச மாநிலத்திற்கு முதலமைச்சராக வர முடிந்தது ஆனாலும் கூட அந்த கட்சியிலும் உயர்சாதியினர் உள்ளே புகுந்து இன்று ஒரு எம்பி கூட இல்லாத நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.
நமது இந்தியாவை மொழியாலும் மதத்தாலும் உடைக்க நினைப்பவர்கள் தற்போது அம்பேத்கர் ஒருங்கிணைத்த எஸ்சி எஸ்டி மக்களையும் துணை பிரிவு சாதிகளில் உடைத்து நாசமாக முனைந்துள்ளனர். ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை.
Correct
ReplyDelete