பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்?யாராவது சொல்ல முடியுமா?
பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்?
யாராவது பதில் சொல்ல முடியுமா?
தாழ்த்தப்பட்டவன் கோவிலுக்குள் சென்றால் அவன் பிரச்னை தீர்ந்து விடுமா?
அதனால் தான் Dr Ambedkar பெரியாரை முழுமையாக ஆதரிக்க மறுத்தார்.
Dr Ambedkar,
1)பாராளுமன்றம்/சட்டமன்றம் போனால் தான் அதிகாரம் கிடைக்கும்.
2)பள்ளிக்கூடம் போனால் தான் அறிவு கிடைக்கும்.வேலை கிடைக்கும்.
3)அரசாங்க வேலைக்கு போனால் தான் மரியாதை கிடைக்கும்.
4) வேலைக்கு போனால் தான் பணம் கிடைக்கும். பணம் கிடைத்தால் தான் வீடு வாங்கலாம் நிலம் வாங்கலாம் நமக்கும் அந்தஸ்து கிடைக்கும்.
இதைத்தான் டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால் கோயிலுக்கு போனால் என்ன கிடைக்கும் விபூதி கிடைக்கும் குங்குமம் கிடைக்கும். அதைத் தவிர வேறு எதுவும் கிடைக்குமா?
கோவிலுக்கு வாசலிலே உட்கார்ந்து கொண்டிருக்கிற பிச்சைக்காரனுக்கு உதவாத கடவுளு, நம்ம வாரத்துக்கு ஒருமுறை பத்து ரூபாய் உண்டி இல் போட்டு சாமி கும்பிட்ட நமக்கு எல்லாத்தையும் அவர் கொடுத்துடுவாரா. கல்வி கொடுத்துடுவாரா ஒதுக்கீடு இல்லனா நீ பள்ளிக்கூடத்துக்குள்ளே நுழைய முடியாது. காசு கொடுத்துட்டு வர கவர்மெண்ட்ல வந்து ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் உனக்கு வேலையே கிடையாது. பணமும் கிடையாது கோமணம் கட்டிக்கிட்டு பிச்சைக்காரன் மாதிரி இருக்க வேண்டியதுதான். இதை புரிந்து கொள்ளாத சில சகோதரர்கள் பெரியார் ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தார் என்று பேசிக் கொண்டிஇருக்கிறார்கள். நமக்கு அவர் என்ன உழைத்தார் என்று யாராவது சொல்லுங்கள்.
சாமி இருந்தாலும் நமக்கு பிரயோஜனம் இல்ல, சாமி இல்லாட்டியும் நமக்கு பிரயோஜனம் இல்லை, அம்பேத்கர் இருந்தா மட்டும் தான் நமக்கு பிரயோஜனம் ஒதுக்கீடு இருந்தா மட்டும் தான் நமக்கு பிரயோஜனம். யாரு நமக்கு ஒதுக்கீடு கொடுத்தாரோ அவர்தான் நமக்கு கடவுள்.
இதை மிகப்பெரிய அறிவாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
......
Comments
Post a Comment